பிரான்ஸ் பிள்ளையார் தேர்ப் பவனியில் அனைத்துலக விசாரணைக்கான விழிப்பூட்டல்!

  • September 2, 2014
  • HRC
france_ther_005ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள், புலம்பெயர் நாடுகளெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனொரு அங்கமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்திருந்த பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர்த் திருவிழாவில், இது தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன.

அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம் எனும் தலைப்பில், பொதுமக்களுக்கு விழிப்பினையூட்டும் வகையில், கேள்வி, பதில் வடிவில் இத்துண்டுப் பிரசுரம் அமைந்திருந்தது.

இவ்விழிப்பூட்டல் ஊடாக தமிழினப் படுகொலை தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்டுவதனை செயல்முனைப்பாக கொண்டுள்ள இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையத்துக்கு வலுவூட்டும் வகையில், இச்செயற்பாடு அமைந்திருந்ததோடு, இவ்வகையான விழிப்பூட்டல் பரப்புரைகள், புலம்பெயர் நாடுகள் எங்கும் இம்மையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

More from our blog

See all posts