அனைத்துலக விசாரணையில் பங்கெடுக்க வேண்டுமா ? பதில் இங்கே !

அனைத்துலக விசாரணையில் பங்கெடுக்க வேண்டுமா ? பதில் இங்கே !

தமிழினஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக நாம் கோருவதற்கு எட்டியுள்ள இந்த வாய்ப்பினை நாம் அனைவரும் விரைந்துணர்ந்து செயற்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை இனங்கண்டு பதியலிடும் முனைப்பில் ஈடுபட்டுள்ள இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையத்துக்கு வலுவூட்டும் பரப்புரைக் கொத்திலியே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக விசாரணை தொடர்பில் பொதுதளத்தில் விழிப்பினை ஏற்படுத்தும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான பரப்புரை கொத்தின் உள்ளடக்கம் :

அனைத்துலக விசாரணையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன ?

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்விசாரணைக்கு வலுவூட்டி சாட்சியங்களை ஆதாரங்களை பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் வழங்குவதன் மூலம் தமிழினஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக நாம் கோருவதற்கு வாய்ப்பு எட்டியுள்ளது.

எந்த காலப்பகுதிக்குள் பாதிப்புக்குள்ளானவர்கள் சாட்சியங்களை வழங்கமுடியும் ?

21 பெப்வரி 2002ம் ஆண்டில் இருந்து 15 நொவெம்பர் 2011ம் ஆண்டுக்குள் பாதிப்புக்குள்ளானவர்களும் இந்த காலப்பகுதியோடு ஒட்டிய சம்பவங்களோடு தொடர்புடைய முந்திய அல்லது பிந்திய காலச்சம்பவங்களையும் வழங்கமுடியும்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை பொதுவாக பதிவு செய்வதன் ஊடாக ஐ.நா விசாரணைக்கு அப்பாலும் பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்களின் முன் வழக்குத் தொடுக்கும் நுட்பங்களுக்கு வலுவூட்டும்.

சாட்சியங்கள் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படுமா ?

நிச்சயமாக.

சாட்சியங்கள் அளிக்கும் ஒவ்வொருவரது வாக்குமூலங்களும் அவர்களது விபரங்களும் இரகசியமாக பாதுகாக்கபடும் என்பது ஐ.நாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாட்சியமளிப்போரின் உறவினர்கள் சிறிலங்காவில் இருப்பின் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா ?

இரகசியத்தன்மை உறுதியாக பேணப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சிறிலங்காவுக்கோ அல்லது அதனோடு சம்பந்தபட்டவர்களுக்கேர் தகவல்கள் செல்லாதிருப்பதற்கான பொறிமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

unnamed (18)

unnamed (19)

More from our blog

See all posts