தமிழர்களது வழிபாட்டு உரிமை – சாட்சியங்களின் பாதுகாப்பு : அனைத்துலக சமூகம் நோக்கி !

  • September 8, 2014
  • TGTE
Rudra

அனைத்துலக சமூகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வாரம் வெளியிட்டிருந்த  ஆங்கிலச் செய்திக்குறிப்பில், ஐ.நாவிசாரணையின் சாட்சியங்களி;ன் பாதுகாப்பு மற்றும் இலங்கைத்தீவில் தமிழர்களது வழிபாட்டு உரிமை ஆகியன முக்கிய இடத்தினைபிடித்துள்ளது.

இலங்கையில் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா மனித உரிமைச்சபை புதிய ஆணையாளரது கருத்தினையும் கோடிட்டுக்காட்டி, ஐ.நாவின் அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு, சிறிலங்காவினை சென்றடைந்துள்ள ஜப்பானியா பிரதமர் சின்சோ அபே அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த வேள்வித்திருவிழாவுக்கு உள்ளுர் அரசசெயலகத்திடம் அனுமதிபெற வேண்டுமென்ற விவகாரம், மற்றும் மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக சிறிலங்கா புலனாய்வாளர்களால் நிறுத்தப்பட்ட விவகாரத்தினை ஆகியன தொடர்பிலும், ஐ.நா மனித உரிமைச்சபையின் மத வழிபாட்டு சுதந்திரத்துக்கான சிறப்பு பிரதிநிதி Heiner Bielefeldt கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

More from our blog

See all posts