பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துவீர்களா என மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா!

  • December 20, 2014
  • TGTE

IMG_4598

ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி,

இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா அவர்கள் சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் ருவிற்றரில் கேள்வியொன்றினைத் தொடுத்திருந்தார்.

தமிழ்மக்கள் தங்களின் அரசியல்தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் தடையாக உள்ள சிறிலங்காவின் 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கினால், பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை எழும். அதற்கு 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கிவீர்களா என ரணில் விக்கிரமசிங்கேவிடம் மறுகேள்வியினை உசா சிறீஸ்கநத்ராஜா ருவிற்றரில் தொடுத்த போது ரணில் விக்கிரமசிங்கே பதில் எதனையும் அளிக்கவில்லை.

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர் மக்கள் பங்குகொள்ளும் பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கையினை, அனைத்துலகத்திடம் முன்வைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது

Ranil_Twitter

More from our blog

See all posts