சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

  • January 12, 2015
  • TGTE

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

JAN 12, 15 • IN ஒளிப்படச்செய்தி, தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பம் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முற்றாக நிராகரித்துள்ளது.

இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தலில் தமிழர் தாயக மக்களின் தீவிரமான பங்கெடுப்பு குறித்து, கொழும்பு சண்டே லீடர் ஆங்கில ஊடகத்தினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கிய கருத்தினையும் உள்ளிடக்கி, ‘புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் அமைப்புக்கள் விருப்பம்’ என தலைப்பிட்டு அவ்வூடகம் வெளியிட்டிருந்தது.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்த கருத்தில் எந்தவொரு இடத்திலும் புதிய ஜனாதிபதியுடன் நல்லுறவைப் பேண விரும்பம் என தெரிவித்திருக்கவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தினால் நடாத்தப்படும் தேர்தல்களில் தமிழ்மக்கள் தாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து தந்திரோபாயமாகவே எப்போதும் தேர்தலை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்துரைத்திருந்தார்.

இந்த தேர்தலில் தமிழர் தாயக மக்களின் தீவிர பங்கெடுப்பு ஒரு புதிய தலைவருக்கான தெரிவுக்கோ அன்றி நம்பிக்கையிலோ அல்லாது மாறாக தற்போதைய தலைவரின் மீதான வெறுப்புக்கும் அவரை தூக்கி எறிவதற்குமான வாக்காகத் தான் பார்க்கவேண்டும். தமது சுயநிர்ணய உரிமையையும் தேசியத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பே தமிழ் மக்களின் உண்மையான விருப்பாகும். ஆகவே, சிறிலங்கா அரசியல் யாப்பின் 6 வது திருத்தம் நீக்கப்பட்டு வாக்களிக்கும் சரியான சூழல் ஏற்படுத்தப்படும் போதுதான் தமிழ் மக்கள் தங்கள் விருப்பை உண்மையாக வெளிப்படுத்துவார்கள் என்று மேலும் பிரதமர் வி உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

கொழும்பு ஊடக வெளியிட்டிருந்த செய்தியினை இணைப்பு :

http://www.thesundayleader.lk/2015/01/11/diaspora-seek-engagement/

 

PR_TGTE_jan12-2015-page-001

நாதம் ஊடகசேவை

More from our blog

See all posts