இலக்குகள் ஆறுடன் நிறைவுகண்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

நீதியினை வென்றடைவதற்கான ஆறு இலக்குகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை அமர்வு எழுச்சிபூர்வமாக நிறைவுகண்டுள்ளது.

மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கா கனடா பிரான்ஸ் சுவிஸ் நோர்வே பிரித்தானியாக என புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்திருந்தனர்.

அரசவைத் தலைவர் முனைவர் தவேந்திராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த அரசவை அமர்வினை, பிரதமர் அலுவலக தலைமைச் செயலர் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் வலுவூட்டியிருந்தார். பிரதமர் வி.உருத்திரகுதான் அவர்கள் நியூ யோர்க்கில் இருந்து இணையப் பரிவர்த்தனையூடாக காணொளியூடாக பங்கெடுத்திருந்தார்.

பின்வரும் இலக்குகளை எட்டும் வகைகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தொடரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அமர்வின் நிறைவுரையில் தெரிவித்திருந்தார்.

1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.

2. சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையும் எனும் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக அங்கீகாரத்பை; பெற உழைத்தல்.

3. இனஅழிப்பைத் தடுப்பதற்குரிய பரிகாரநீதி என்பதன் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்காக உழைத்தல்.

4. சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உழைத்தல்.

5. ஈழத் தமிழர் தேசத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தளங்களில் வலுப்படுத்த உழைத்தல்.

6. உலகில் வாரும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழ் மக்களை உலகில் ஒரு வலுமையமாக ஆக்க உழைத்தல்.

timthumb 1

TGTE_3

TGTE_4

TGTE_5

TGTE_6

TGTE_7

TGTE_8

TGTE_10

TGTE_12

TGTE_13

More from our blog

See all posts