ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !

  • June 24, 2015
  • TGTE
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை  தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், தமிழினப்படுகொலையினைப் புரிந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுகள் மீதான சிங்கள தேசத்தின் கோபத்தையே இச் செய்தி வெளிக்காட்டுகின்றது.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவினை மையப்படுத்திய தொடர் உப மாநாடுகள், இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு பொறிமுறை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பன்முகச் செயற்பாடுகள், சிறிலங்கா அரசுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது எனவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான சாட்சியமற்ற போரின் சான்றுகள் தொடர்சியாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்புக்கூறலை நிராகரித்து வருகின்ற சிறிலங்கா அரசாங்கம், இவ்வாறான சான்றுகள் போலியானவை என கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts