நீதிக்கான மரநடுகையுடன் மியான்மாரில் நடைபெற்ற மாவீரர் நாள் !

  • November 27, 2015
  • TGTE
உலகத் தமிழர் பரப்பெங்கும் உணர்வெழுசு;சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வின் ஓர் அங்கமாக மியான்மாரில் நீதிக்கான மரநடுகையுட் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மியான்மாரின் யங்கோன் நகரில் உள்ள அண்ணா அறிவாலயம் தமிழ் பாடசாலையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.

மியான்மார் இளந்தமிழர் இயக்கத்தின் செயல்வீரர் அகத்தியன், சமூகத்தலைவர் சேதுபதி ஆகியோரது உரைகளுடன் ஈழம்வாழ்க எனும் தொனிப்பொருளில் கவிதா வணக்கமும் செலுத்தப்பட்டது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான மரநடுகை செயல்முனைப்பின் ஒர் அங்கமாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பினை நினைவேந்தி நீதிக்கான மரநடுகையும் மியான்மிய தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மியான்மார் குடிகளான ரொகிங்கா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மிய பௌத்த பேரினவாதிகள் இனப்படுகொலையினை மேற்கொண்வருவதான குற்றச்சாட்டுக்கள் உள்ளதோடு, மியான்மிய இனஅழிப்புக்கு சிறிலங்கா பௌத்த பேரினவாதிகள் ஆதரவினைத் தெரிவித்திருந்தமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

The Tamils of Myanmar celebrated the their 4th Mahaveerar Naal in Yangon at the Anna Arivaalayam Tamil School.

The Tamil youth leader of the Ilam Tamilar Iyakam of Myanmar Mr Agathian stressed the importance of the sacrifices made by the Mahaveerars and what they stood for. He said that as Tamils we need to keep our identity and language and join hands with the Tamil Diaspora for justice and accountability.

An elder of the community Mr Sethupathy gave a brief history of the struggle of Tamils in the Island of Sri Lanka. A poem – “Eelam Valga” was also read out.

TGTE Minister of International Affairs Mr Manicka Vasagar from Australia and Dr Dagma Helman a Tamil speaking German academic also addressed the audience.

More from our blog

See all posts