ஐ.நா கூட்டத்தொடரில் ஆணையாளர் மௌனம்! அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு தீவிரம்!

  • March 1, 2016
  • TGTE
 ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்பையின் 31வது கூட்டத் தொடர் பெப்29 திங்களன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ளது. ஒன்பது நாடுகள் 2016ம் ஆண்டின் இவ்முதற் கூட்டத் தொடரில் இருந்து புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ளன.

அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த தனது பயணம் தொடர்பில் அமர்வின் முதன்நாள் தொடக்கவுரையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் அவர்கள் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

கடந்தாண்டு சிறிலங்கா தொடர்பில் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து, வரும் மாதக் கூட்டத் தொடரிலேயே ஆணையாளர் அவர்கள் வாய்மொழியாக சபைக்கு தெரிவிக்க வேண்டுமென அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத் தொடரில் சிறிலங்காவைத் தவிர்த்திருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தினை மையப்படுத்தி *The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) *சிறிலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப்பொறியமைவுகளை சுதந்திரமாக கண்காணித்து வரும் அனைத்துலக அவதானிப்பு குழுவின் செயற்பாடுகள் இக்கூட்டத் தொடரில் முதன்மைப்படுத்தப்பட்டு;ள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு அமைந்துள்ளது.

இக்கூட்டத் தொடரில் இந்த நிபுணர் குழு சிறிலங்காவை மையப்படுத்தி உப மாநாடொன்றினையும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சுதன்ராஜ், மேலும் 7 உப மாநாடுகள் சிறிலங்காவை மையப்படுத்தி இடம்பெறுவதற்கு பல்வேறு அமைப்புக்களினாலும் நிரல்படுத்தப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தீர்மானத்தின் வாயிலாக கிடைத்த 18 மாதங்களை, தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முனைவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், அதனை அனைத்துலக அரங்கில் தமிழர்கள் தீவிரமாக அம்பலப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் சுதன்ராஜ் மேலும் தெரிவித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) குழுவில், சர்வதேசக் குற்றவியல் சட்டம், மனித உரிமைகள், தேசிய போர்க்குற்ற நீதிமன்றங்கள், பிராந்தியக் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில் சட்டபூர்வ நிபுணத்துவம் பெற்ற மரீ கிராட் (பிரான்ஸ்), பீட்டர் ஹெயின்ஸ் க்யூசி (பிரித்தானியா) , ரிச்சாரட் ஜே.ரோஜர்ஸ் (பிரித்தானியா), ஹெதர்
றையன் (ஐக்கிய அமெரிக்கா), நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா (இந்தியா) இவர்கள் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

More from our blog

See all posts