வேண்டாம் மற்றுமொரு இனப்படுகொலை : ரொகிங்கியா மக்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை !!

  • September 12, 2017
  • TGTE

மியான்மாரில் ரொகிங்கியா மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையினை தடுக்க ஐ.நாவின் பொதுச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

 

 

இது நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் ஐ.நா பொதுச் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

 

 

மியான்மாரின் மாநிலத்தில் ரொகிங்கியா மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறை என்பது ஒரு அரச பயங்கரவாதம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மாணிக்கவாசகர், இந்த வன்முறைகள் மிக் பெரும் இனப்படுகொலையினை நோக்கி செல்வதாக எச்சரித்துள்ளார்.

 

 

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலை . உட்பட கம்போடியா, றுவண்டா ஆகிய நாடுகளில் நடந்தேறிய இனப்படுகொலையினைத் தடுப்பதில் ஐ.நா தவறிவிட்டது மட்டுமல்ல இவ்விவகாரத்தில் ஐ.நா தோல்வி அடைந்து விட்டதனையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், ஐ.நா பொதுச்செயலருக்குரிய சிறப்பு அதிகாரமான பயன்படுத்தி ரொகிங்கியா மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

 

ரொகிங்கியா மக்களுக்கு எதிரான படுகொலையினைக் கண்டித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  தனது அரசவை அமர்வொன்றில் 2012ம் ஆண்டு தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts