குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

  • September 29, 2017
  • TGTE

குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

 

 

ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர்.

 

ஈராக்க, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் உள்ள குர்திஷ்தான் அமைப்புக்களினாலும் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

 

அமெரிக்காவின் நியு யோர்கில் அமைந்துள்ள குர்திஷ்தான் தூதரகத்தின வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் மக்களுக்கும் குர்திஷ்தான் தேசத்துக்கும் ஈழத்தமிழர் தேசத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

 

குர்திஷ்தானின் தூதுவர் Ms. Bayan Sami Abdul Rahman அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
தோழமையினையையும் தெரிவித்துக் கொண்டார்.

 

 
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரை ஒன்றினை வழங்கையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு ஒன்றினை வலியுறுத்தும் “YES TO REFERENDUM”எனும் இயக்கதினை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

 

 

தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே அதன் பிரதான விடயமாக உள்ளது.

 

 
தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக உள்ளது.

 

 
இந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

With Kurdish Ambassador to US

More from our blog

See all posts