நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது.
 
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது.
 
அந்தவகையில் சிங்களப் பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருதினையும், உயர் சட்டத்தரணி கரிகாலன்  எஸ். நவரத்தினம் அவர்களுக்கு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) விருதினையும், பேராசிரியர் சபாநாயகம் தேவநாயகம் அவர்களுக்கு மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருதினையும், செல்வி சிபொன் அமுதரசன் அவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் புலமைப்பரிசிலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை எதிர்த்துப் போராடிவரும் வாழ்நாள் உறுதிப்பாட்டுக்காக முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. 
 
‘முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா :
 
தமிழினத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்துத் தீரத்துடனும் பலநேரம் தனியொருவராகவும் முன்வந்து இயக்கம் நடத்தியுள்ளார். தம் சொந்த சிங்கள உடன்பிறப்புகளின் நல்வாழ்வில் எவ்வளவு அக்கறை கொண்டவரோ அதே அளவுக்குத் தமிழர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர் முனைவர் செனிவிரத்னா. 
 
சிறிலங்காவில் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதையும், தமிழர்களின் சனநாயக அறப் போராட்டங்கள் அரசாங்க ஆதரவு பெற்ற இனவதைகளாலும் இராணுவப் படைகளாலும் அடக்கப்படுவதையும் கண்ட முனைவர் செனிவிரத்னா தமிழர்தம் உரிமைகளைக் காப்பதே வாழ்வில் தம் கடன் எனக் கொண்டார். அவர்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் நிகர்மை, கண்ணியம், இடர்காப்புடனும், பாகுபாடின்றியும் வாழும் உரிமைக்காகப் போராடி, சிங்கள இனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகள், வாய்ப்பு வசதிகளை அவர்களும் துய்க்க வழி செய்வதைக் குறிக்கோளாக ஏற்றார். 
 
1972ஆம் ஆண்டு செனிவிரத்னா பெரதேனியா பலகலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருந்த நேரத்தில் அவருக்கு உறவுக்காரரான சிறிமா பண்டாரநாயக்காவின் பிரதமர் பதவிக் காலத்தில் சிங்களக் காடையர்கள் தமிழர்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வேட்டையாடித் துரத்திய போது அந்தத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் செனிவிரத்னா. அவரே நகைச்சுவையாகக் கூறியது போல் ‘இரவுச் சுற்று’ சென்று (மருத்துவ மனையில் தொகுதி தொகுதியாகப் பார்வையிடுவாரே, அப்படி)  கண்டித் தெருக்களில் அலைந்து, செத்துக் கொண்டிருந்த தமிழர்களை அள்ளி வந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தார்; உயிர்பிழைக்க முடியாதவர்களுக்குக் கண்ணியமான சாவு கிடைக்கச் செய்தார்.  
 
இவரது தன்னளிப்பை அறிந்தேற்குமுகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேலவை உறுப்பினராக அமர்த்தப்பட்டார். 
 
கரிகாலன் எஸ். நவரத்தினம் :
 
கரிகாலன் 1958ஆம் ஆண்டு தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய போது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தார். அவ்வாண்டில் ‘தனிச்சிங்களம் – சிறி’ எதிர்ப்புப் போராட்டத்தில் எஸ்.ஜே,வி. செல்வநாயகம் (தந்தை செல்வா), வன்னியசிங்கம் போன்ற தமிழர் தலைவர்களோடு தளைப்படுத்தப்பட்டார். தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காகத் தளைப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட முதல் போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திரு கரிகாலன் தமிழர் போராட்டத்தில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு, தமிழர்களின் பெரும் அறப் போரட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்தார். இவற்றுள் ஒன்றாகிய 1961 அறப் போராட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைதிவழிப்பட்ட தமிழர் உரிமைக் கிளர்ச்சிகளால் மூன்று மாதக் காலம் அடியோடு முடங்கிப் போயிற்று. சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிநிலை அறிவித்து, கரிகாலனையும், எஸ்.ஜே,வி. செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்ற தலைவர்களையும் தளைப்படுத்தியது. அவர்களனைவரும் தெற்கில் பனகொடா எனப்படும் இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டனர். இருபது வயதுக் கரிகாலன்தான் சிறைப்பட்டவர்களிலேயே இளையவர். ஆறு மாதக் காலச் சிறைக் காவலுக்குப் பின் மற்றத் தலைவர்களோடு அவரும் விடுதலை செய்யப்பட்டார்.    
 
கரிகாலன் சட்டத் தரணியாக உறுதியெடுத்துப் பொறுப்பேற்ற போது அவரைப் பாராட்டி வாழ்த்த எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களே நேரில் உச்ச நீதிமன்றம் சென்றதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் சட்டத் தாரணி ஆன பிறகு செல்வநாயகம் உள்ளிட்ட தமிழர் தலைவர்களோடு நெருக்கமாக இருந்துச் செயல்பட்டார். தமிழர்தம் கோரிக்கைகள் குறித்தான முக்கிய ஆவணங்களும் உடன்படிக்கைகளும் விவாதித்து வரையும் பணியில் அவரே நேரில் எஸ்ஜேவி செல்வநாயகத்துடன் நேரம் செலவிட்டார்.     
 
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்ட போது, அவர் அம்மாணவர்களின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவராகி, தமக்கு வரக் கூடிய பேராபத்து பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு உதவினார். நீதிமன்றங்களில் பொன். சிவகுமாரன், தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட தமிழ் இளைஞர்களுக்காக வழக்குரைத்தார். தங்கத்துரை தமக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது,  கரிகாலனைப் போற்றித் தன் மகனுக்குக் கரிகாலன் என்றே பெயரிட்டார். தங்கத்துரையும் குட்டிமணியும் மேலும் 52 தமிழ் அரசியல் கைதிகளும் 1983 தமிழர் இனவதையின் போது வெலிக்கடைச் சிறைக்குள் சிங்கள சிறைக் காவலர்களின் துணையோடு சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
 
 
 

The Nelson Mandela Memorial Award (2018)

Awarded to

Dr Brian Senewiratne

The Transnational Government of Tamil Eelam (TGTE) has three annual Awards given to people who have made an outstanding contribution. One of them is the Nelson Mandela Memorial Award. Thefirst recipient in 2017 was Yasmin Sooka,Executive Director of the Foundation for Human Rights, South Africa.

This year (2018), it is Dr Brian Senewiratne, a Physician and Human Rights activist in Brisbane, Australia.

 Nelson Mandela

Nelson Rolihlahla Mandela was born in Transkei, South Africa on July 18, 1918. He studied at University College of Fort Hare and completed a degree in Law at the Witwaterstrand. He joined the African National Congress in 1944 and was engaged in resistance against the ruling National Party’s apartheid policies after 1948. He went to trial for treason in 1956-1961 and was acquitted in 1961. He was arrested again in 1962 and sentenced to five years of imprisonment with hard labour.

During his years in prison, Nelson Mandela’s reputation grew steadily. He was widely accepted as the most significant black leader in South Africa and became a potent symbol of resistance as the anti-apartheid movement gathered strength. He consistently refused to compromise his political positions to obtain his freedom.  

He spent 27 years in prison, much of it in a cell on Robben Island. The rest of his incarceration was in Pollsmoor Prison, on convictions for crimes that included sabotage committed while he spearheaded the struggle against apartheid.

Following his release from prison on 11 February 1990, his advocacy of a policy of reconciliation and negotiation helped lead the transition to multi-racial democratic South Africa. Since the end of apartheid, he was widely praised, even by his former opponents.

From 1994 to 1999, Mandela was President of South Africa. He was the first African to be elected in the fully representative democratic polls. In the 21st century, Nelson Mandela’s legacy stands out as the most powerful symbol of hope for the oppressed people across the globe.

The Award named after President Nelson Mandela is presented to a person or an institution from any country across the globe that is deemed to be promoting peace and reconciliation and for fearlessly advocating on behalf of War Victims, Refugees, Stateless persons, Victims of Torture, prisoners of conscience, ethnic and national minorities and de-territorialized populations in any country or State across the globe.

The recipient of the Nelson Mandela Memorial Award for 2018

 Dr Brian Senewiratne

MA, (Cantab), MBBChir(Cantab), MBBS Hons (Lond), MD (Lond), FRCP(Lond), FRACP

Dr Brian Senewiratne is a highly accomplished scholar, a dedicated physician, a clinical Professor of Medicine, an ardent advocate for social justice, a tireless promoter of peace, and a world renowned activist working for the liberation of all oppressed human communities and minorities across the world.

He is a Sinhalese from the majority community in Sri Lanka who has campaigned for more than half a century for the rights of the Tamil ‘minority’ to live with equality, peace, justice and without discrimination. He is about the only expatriate Sinhalese to do so.He spoke out publicly in 1948 when he was only a 16 year old schoolboy in support of the Tamils of Indian origin who were arbitrarily rendered stateless in Sri Lanka. In 1956 as an undergraduate in Cambridge University he firmly opposed the Sinhala Only Act that made Sri Lankan Tamils second class citizens.

His outspoken ways, strong convictions and activism made it increasingly difficult for him to remain in the island and in 1976 he left the country to take up a position in Australia as Associate Professor of Medicine and has been unable to return to Sri Lanka for reasons of safety. In Australia he continued to challenge the anti-Tamil stance of Sri Lankan government of J.R.Jayawardene and his successors, some of them his relatives.

His steadfast commitment to defending human rights and promoting social justice is an inborn trait that in his entire life he has fought relentlessly for people who are marginalised and persecuted, based on ethnicity, race, religion, language and culture. He advocates on behalf of all oppressed communities in Sri Lanka and for refugees seeking asylum in Australia. He has been raising awareness of the plight of these people through education, international advocacy, lobbying and active engagement.

He has engaged, educated and lobbied parliamentarians and human rights groups in Australia as well as Canada, France, Germany, India, New Zealand, Norway, Sweden, South Africa, Switzerland, UK, USA and the EU. He has addressed European Members of Parliament in the EU Parliamentary complex chaired by Robert Evans EU MP, Britain’s most senior MP to the EU. He has addressed meetings on the discrimination of the Sri Lankan Tamils in meetings in the British Parliament (House of Commons) and the Indian Parliamentary complex.

In July 2008, Dr Senewiratne travelled to South Africa to meet with Nobel Laureate Archbishop Desmond Tutu in Cape Town and other ANC leaders and politicians to discuss the deteriorating human rights situation in Sri Lanka. All this activity was self-funded.

His many books include “The 1983 Massacre – Unanswered Questions” and “Sri Lanka: Sexual Violence of Tamils by the Armed Forces”. He has published scores of articles on human rights.

 He has recorded a dozen dvds to document the suffering of the Tamil people in Sri Lanka.

It is not surprising that the 2018 recipient of the Nelson Mandela Memorial Award is the well-known and internationally respected human rights activist, Dr Brian Senewiratne.

 
 

More from our blog

See all posts