கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !!

  • July 26, 2019
  • TGTE

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றாகவுள்ள கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலையின் நீதிகோரி, பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் யுலை 23ம் நாளன்று,  கறுப்புயூலையின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெற இருக்கின்ற நிலையில், முன்னராக 21ம் நாளன்று நீதிகோரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன என இக்கவனயீர்ப்பு போராட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts