விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை என்பது தமிழ்மக்களின் தமிழீழ போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றது : பிரதமர் !

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீடு விசாரணை !

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, சுயநிர்ணய உரிமையின் அடிப்பமையில் சுதந்திர தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு குந்தகம் விளைக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான பயங்கரவாத முத்திரையினை, சிறிலங்கா அரசு தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக கைக்கொள்கின்றது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக இந்த சட்டநடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் முத்திரை குத்துவதற்கு எதிரான முக்கிய அறைகூவல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓர் அமைப்பு நிகழ்நடப்பில் (பிரித்தானிய பயங்கரவாதச் சட்டம், 2000 தந்துள்ள வரைவிலக்கணப்படி) ”பயங்கரவாதத்தில்’ தொடர்புடையது’ என்று பிரித்தானிய உள்துறை ‘நியாயமாக நம்பினால்’ மட்டுமே அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும். ஆனால் தடைக்கான சட்டச் சோதனை தொடர்ந்து நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை அரசினர் மீளாய்வு செய்வதற்கு எவ்விதப் பொறிமுறையும் இல்லை. அதாவது தடைநீக்கத்துக்காக உள்துறைச் செயலருக்குத் தரப்படும் விண்ணப்பம் வெற்றிபெறா விட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காலவரையின்றி தடைப்பட்டியலில் இருந்து வரும் என்று பொருளாகும்.

” தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, சுயநிர்ணய உரிமையின் அடிப்பமையில் சுதந்திர தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு குந்தகம் விளைக்கின்றது “

-பிரதமர் வி.உருத்திரகுமாரன்

பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு, 2018ம் ஆண்டு டிசெம்பரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எழுதிய விண்ணப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரியிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்ற அடிப்படையிலும், அதன் மீதான தடை நீடிப்பது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட) தமிழ்மக்களின் பேச்சுரிமைக்கும், ஒன்றுகூடும் உரிமைக்கும் இடையூறாக உள்ளது என்பதோடு, தமிழர் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளது என்ற அடிப்படையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தடைநீக்கம் கோரப்பட்டிருந்தது.

இதனை 2019 மார்ச்சில் பிரித்தானிய உள்துறைச் செயலர் நிராகரித்த நிலையிலேயே அதற்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்போது மேல்முறையீடு செய்திருந்தது.

நடந்த விசாரணையில் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்த போது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் ‘நம்புவதற்கு நியாயமான காரணங்கள்’ இருப்பதாகக் கூறினார்கள்.

2018 ஜூன் மாதம் இலங்கை ஒட்டுசுட்டானில் மூன்று தனியாட்கள் ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளது கொடிகளையும் தமது வாகனங்களில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரே சம்பவம் பற்றிய சிறிலங்காவின் பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாக பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்திருந்தன். இதன் பொருள் ‘தமிழீழ விடுதலைப் புலிகளைச் சார்ந்த ஆட்களும் குழுக்களும்’ ‘பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களாக’ இருக்கக் கூடும் என்பது இந்தப் பகுப்பாய்வுக் குழுவின் கருத்தாகும்.

இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலித்திருந்ததோடு, குறித்த பத்திரிகைச் செய்திகள் உண்மையானதாக என்றபதற்புகு போதியளவு சான்றுகள், ஆதாரங்கள் பிரித்தானிய உள்துறை அமைச்சு வழஙகவில்லை என்றும், மேலும் இந்த சம்பவத்தினை விடுதலைப்புலிகளுடன் தொடர்ர் படுத்த முடியாது என்று வாதி;ட்டிருந்தது.

குறித்த ஒட்டுசுட்டான் சம்பவம் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதியாக நாடகமாக இருக்கலாம் அதே பத்திரிகையில் இருந்த செய்தியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ‘பயங்கரவாதத்தில் தொடர்புண்டு’ என்று முடிவுசெய்திருந்தாலும், புலிகளை தொடர்ந்து தடை செய்வது குறித்த தற்துணிவு அதிகாரித்தை பிரித்தானிய உள்துறைச் செயலர் சட்டமுறைப்படிப் பயன்படுத்தவில்லை எனவும் வாதிப்பட்டப்பட்டிது. ஏன்எனில் விடுதலைப் புலிகள் மீது தொடரும் தடையினால் தமிழர்கள் சுதந்திர அரசின் வடிவலில் தனியரசுக்கு ஆதரவு திரட்டவும் தெரிவிக்கவும் பிரித்தானியாவில் தமிழர்களுக்குள்ள உரிமைகள் மீது தாக்கம் கொளவதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரையாக அமைந்திருந்தது.

கடந்த யுலை 31ஆம் இடம்பெற்றிருந்த இரகசிய சாட்சியங்களின் அடிப்படையில் இரகசிய விசாணை இடம்பெற்றிருந்தது. இந்த ஆணையத்தின் விசாரணை என்பது பிரித்தானிய நீதித்துறையினால் மறைவான வழக்கு நடவடிக்கையில் கமுக்கச் சாட்சியத்தை ஆணையம் விசாரித்தது.

இந்த விசாரணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமோ, அவர்களது சட்டத்தரணிகளோ கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டவாளர்கள் பட்டியலில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தேர்ந்தெக்கபட்ட சட்டாவாளர் Angus McCulloch Q.C பங்கெடுத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க்கத்தின் இந்த சட்ட நடவடிக்கையில் இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற
Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP. பல முக்கிய சட்டவாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

PRESS RELEASE
31 JULY 2020

PROSCRIBED ORGANISATIONS APPEAL COMMISSION HEARS APPEAL AGAINST LTTE TERRORISM BAN

The Transnational Government of Tamil Eelam (‘the TGTE’)’s appeal against the ongoing proscription of the Liberation Tigers of Tamil Eelam (‘the LTTE’) was heard today before the Proscribed Organisations Appeal Commission (‘POAC’). In its appeal, the TGTE is seeking to have the LTTE (also known as ‘the Tamil Tigers’), removed from the list of proscribed terrorist organisations in the UK.

An organisation may only be proscribed if the Home Secretary “reasonably believes” that it is currently “concerned in ‘terrorism’” (as defined by the Terrorism Act 2000). However, there is no mechanism by which the Government reviews the list of proscribed organisations to ensure the legal test for proscription continues to be met. This means that organisations such as the LTTE remain listed indefinitely, unless an application to the Home Secretary for deproscription is successful.

In December 2018, the TGTE wrote to the then Home Secretary Sajid Javid MP asking him to deproscribe the LTTE on the basis that it was not concerned in terrorism and that its continuing proscription was impeding the freedom of speech and assembly of Tamil people (including the TGTE) who advocate for the right of Tamil self determination in the form of an independent state. In March 2019 the Home Secretary refused the application. It is that refusal which is the subject of the TGTE’s appeal.

At an open hearing on Wednesday, lawyers for the Home Secretary argued that he had ‘reasonable grounds for believing’ that the LTTE was thenconcerned in terrorism. In reaching this conclusion, the Home Secretary had relied on an assessment by the Joint Terrorism Analysis Centre (‘JTAC’) which identified press reports of a single incident in June 2018 in Oddusuddan, Sri Lanka in which three individuals were arrested for allegedly transporting weapons and LTTE flags. JTAC assessed that this could mean that “LTTE aligned individuals and groups” were “concerned in terrorism”. However, the TGTE argues that the information provided to the Home Secretary was insufficient for him to properly assess the credibility of the allegations, nor to assess whether the incident could properly be attributed to the LTTE. The press reports also raise concerns that the incident may in fact have been a ‘sting operation’ by the Sri Lankan Government involving a government informant. The TGTE argues that none of these issues were considered by the Home Secretary when reaching his decision.

The TGTE also argues that, having decided that the LTTE was ‘concerned in terrorism’, the Home Secretary unlawfully exercised his discretion to continue to proscribe the LTTE and failed to take into account the impact of the ongoing proscription of the LTTE on the rights of Tamils in the UK to organise and express their support for Tamil self determination and a separate state of Tamil Eelam.

Visuvanathan Rudrakumaran, Prime Minister of the TGTE said on Friday, “this appeal is an important challenge to the unjustifiable labelling of the LTTE as a terrorist organisation. That label has a chilling effect on people expressing their aspiration for an independent state and the Sri Lankan state uses it as a ruse to hide its genocide of Tamils behind the guise of fighting terrorism”.

The panel heard secret evidence in closed proceedings today, Friday 31 July. Although the TGTE was excluded from participating in today’s hearing, its interests were represented in the closed proceedings by ‘Special Advocates’, Angus McCulloch Q.C and Rachel Toney.

ENDS

For press enquiries contact:

Jamie Potter

Joint Head of Public Law and Human Rights Team
j.potter@bindmans.com

020 7833 4433

Bindmans’ Press Office
press@bindmans.com

020 7833 4433

NOTES FOR EDITORS:

The Transnational Government of Tamil Eelam (‘the TGTE’) was formed after the end of the civil war in Sri Lanka in 2009 and advocates for the right of Tamil people to self determination and the creation of an independent sovereign state of Tamil Eelam in North East Sri Lanka. It is separate from the LTTE.

The TGTE is represented in the open proceedings by Maya Lester QC and Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP. The Government is represented by Sir James Eadie QC, Ben Watson and Emily Wilsdon.

The appeal is being heard by Mrs Justice Laing and two lay panel members, Richard Whittam QC and Philip Nelson CMG.

Transnational Government of Tamil Eelam
TGTE

More from our blog

See all posts