மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

  • November 19, 2020
  • TGTE

இந்நிகழ்வுகளை  www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.

இந்நிகழ்வுகளை  www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

இந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :

தமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாளாகிய மாவீரர் நாளினை நினைவேந்த உலகத்தமிழர்களாய் நாம் தயாராவோம்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்கள் மாவீரர்கள்.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு ஏற்படுத்திய தடைகளை முன்னராக ஏற்படுத்தியிருந்தது.

தற்போது மாவீரர் நாளினை முன்னெடுக்க முனையும் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு அச்சுறுத்தி வருகின்றது.

மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமைகளை கவனத்தில் கொண்டு தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம். இதற்காக உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தவாறு ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மாவீரர் நாள் வாரம் :

நொவெம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.

நொவெம்பர் 27 – மாவீரர் நாள் :

தாயக நேரம் மாலை 6h05க்கு  தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வுகளை  www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.

தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts