பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு வருகின்றது !

Please Watch Live Telecast: – www.tgte.tv  @ 3.00pm (UK), 4.00pm(EU),10.00am (EST),8.30pm (TE ,INDIA), 2.00am(SYDNEY)

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்து அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துருந்தது.

இந்நிலையில் நாளை வியாழக்கிழமை இரு தரப்பு வாதுரைகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு ஆணையம் தனது அடுத்த தீர்ப்பினை வழங்க இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Please Watch Live Telecast at 3.00pm (UK), 4.00pm(EU),10.00am (EST),8.30pm (TE ,INDIA), 2.00am(SYDNEY):- www.tgte.tv 

More from our blog

See all posts