தீர்வினை நோக்கி பிரித்தானியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் தீர்வினை நோக்கிய பயணத்தில், February 18ம் திகதி உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிற நிலையில்

இதற்கான செயல்முனைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பாக தமிழர் தரப்பு அபிலாசைகளை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் ஊடாக

www.lifttheban.uk

எனும் இணையவழி கையெழுத்து போராட்டத்தினை ஆரம்பித்திருந்தது. இந்த இணையவழி தொடக்கநிகழ்வு 02.04.2021 வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இணையவழி கருத்தாடல்களுடன் நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்வாக நாடுகடந்த அரசாங்கத்தின் உதவிப்பிரதமர் மதிப்பிற்குரிய பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து தடைநீக்க சட்டப்போராட்டத்தின் கடந்துவந்த பாதையும் அடுத்த கட்ட நகர்வுகளும் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தடை நீக்கத்தின் அரசியல் பரிமாணம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் மதிப்பிற்குரிய சிவகுருநாதன் சுதன்ராஜ் அவர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து அதிகளாக வருகை தந்திருந்த


1. Mr. Upkar Singh Rai (Officer of the pressure group Nations without States),

2. Mr.Sen Kandiah (Leader, British Tamil for Labour),

3. Cllr.Sashi Mylvaganam (Liberal Democrats, Opposition leader & local councillor at Surrey Heath Council),

4. Arun Gananathan (Solicitor – UK),

5. Mr. Vel Tharma (ILC Radio)

ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருந்துக்களை பகிர்ந்திருந்த அதே வேளை கையெழுத்து போராட்டம் தொடர்பான முக்கியத்துவம் தொடர்பாகவும் எடுத்துரைந்திருந்தனர்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் அனுப்பிட இன்றே விரைந்திடுங்கள்.

www.lifttheban.uk

More from our blog

See all posts