சீன நிறுவனத்தின் கடலட்டை விவகாரம் : அந்தியசக்திகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தமிழர்தேசம் போராடவேண்டும் ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

  • July 17, 2021
  • TGTE

சீன நிறுவனத்தின் கடலட்டை விவகாரத்தில் மட்டுமல்ல, தாயக மக்களது சம்மதம் பெறப்படாத எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழர் தேசம் போராட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தின் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாயக மக்களது சம்மத்தினை பெறாது மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை வளர்ப்பு தொடர்பில் கருத்து  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,

தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, தமிழர் தேசத்துக்குரிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்.

அவ்வாறு தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாத எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தமிழர் தேசம் போராட வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கடந்த அரசவை அமர்வின் போது ‘இந்தியப் பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’ என்ற தொனிப்பொருளில் அறிஞர் பெருமக்கள் பலர் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு, இது தொடர்பில் பிரமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தாயக மக்களை நோக்கியும், தாயக அரசியல் தலைவர்களை நோக்கியும் அறைகூவல் விடுத்திருந்தார்.

தற்போது சீன நிறுவனத்தின் கடலட்டை விவகாரத்தில் தமிழர் தாயகத்தில் எழுந்துள்ள எதிர்வினைகள், இவ்வாறான அத்தமீறல்கள் தொடர்பில் விழிப்பு ஏற்பட்டு வருவதனை எடுத்துக்காட்டுகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

More from our blog

See all posts