தமிழகம்-இந்தியா : ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பும் தொல்.திருமாவளவனின் பதிலுரையும் !!


ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் இந்தியா காத்திரமான பங்கினையாற்றுவதற்கு தமிழகம் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பதிலுரைத்துள்ளார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்களின் பேரவையின் 35வது தமிழ் பெருவிழாவில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் தமிழகம் எத்தகைய பங்களிப்பினை செய்ய வேண்டும் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் திரு.சிவஞானம் சிறிதரன், திரு.சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவில் சமூகப் பிரதிநிதி தவத்திரு.வேலன் சுவாமி, தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவளவன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் கருத்தாடல்களை நிகழ்த்தியிருந்தனர்.

சிறிலங்கா தனது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆக்கிரமித்துள்ள தமிழர் தாயகத்தில் மேற்கொண்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கல், தொடரும் மனித உரிமை மீறல்கள் உட்பட தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுசனவாக்கெடுப்பொன்றினை நடத்தவும், இந்தியா தமிழர் நலன்சார்ந்து காத்திரமான பங்;கினையாற்றுவதற்கு தமிழகம் உந்துசக்தியாயக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை ஈழத்தமிழர் பிரதிநிதிகள் தமது கருத்துரைகளில் முன்வைத்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமாகிய தொல்.திருமாளவளவன், தமிழகத்தின் இரு பெருங்கட்சிகளையும், மத்தியில் இரு பெருங்கட்சிகளையும் ஈழத்தமிழர்கள் சமமாக அணுகுகின்ற உத்தியினை கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உள்ளனர் என கூறப்படுகின்ற இரண்டு பெரும் கட்சிகள் உள்ளது. தவிர இன்னும் பல கட்சிகள் தமிழீழ சிக்கலில் ஈடுபாடு கொண்டுள்ளன.
இரண்டு பெரிய கட்சிகளும் 91க்கு பின்னராக ஈழத்தமிழர், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவில் ஓர் தேக்கத்தினை தயக்கத்தினை கொண்டுள்ளன.

இந்திய அரசின் காதுகளுக்கு எட்டுகின்ற வகையில் இந்திய நாடாளுமன்றில் குரல் கொடுக்க கூடிய பெரிய கட்சிகளாக இவைகள் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட்டால்தான் இந்திய அரசின் கவனத்தினை பெறமுடியும். பிற கட்சிகள் பேசினாலும் இந்திய அரசின் கவனத்தை பெறமுடியவில்லை.

91க்கு பின்னராக அதிமுக அமைதியாகவிட்டது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் 91க்கு முன்னர் இருந்த வேகம் திமுகவுக்கு தற்போது இல்லை.

இந்த இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

இந்த இரண்டு கட்சிகளையும் ஈழத்தமிழர்கள் சமனாக கையாளவேண்டும். நடைமுறை சாத்தியப்பாடுகள் இருந்து சிந்திக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் கொங்கிரல் பாஜக இரண்டும் ஒன்றுதான்.

தமிழ்நாட்டு அரசியலின் தேர்தல் கூட்டணி பற்றி ஈழத்தமிழர்கள் யோசிக்க கூடாது.

தமிழ்நாடு, மத்தி என நான்கு பெரிய கட்சிகளுடன் ஈழத்மிழர்கள் சமனாக கையாளுகின்ற தன்மையினைப் பொறுத்த ஈழத்தமிழர் தொடர்பில் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் தெரியும் என தொல்.திருமாளவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts