பிரித்தானியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றதமிழ் மரபுத் திங்கள் பெருவிழா!

  • January 25, 2023
  • TGTE

தமிழரின் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்கவும் வளர்ந்து வருகின்ற எமது இளைய தலைமுறையினருக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி தொடர்ந்து

 முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழரின் பெரு விழாக்களில் தமிழ் மரபுத் திங்களும் தவிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழர்கள் மத்தியில் வாழ்வுடன் ஒன்றித்து உள்ளது. அதே நேரம் புலம்பெயர் தேசங்களிலும் இதனை உணர்த்த வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.

அந்த வகையில் பிரித்தானியாவில் குறைடன் பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் குறைடன் தமிழ் சமூக அமைப்பினர் இனைந்து இந்நிகழ்வை நடாத்தியிருந்தனர்.

மதியம் 2மணியளவில் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத்  தொடர்ந்து பிரித்தானியக் கொடியை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திருமதி சுதா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள்ஏற்றி வைத்தார். அனைவரும் கூடி பொங்கலிட இனிதே நிகழ்வுகள் ஆரம்பமானது.

பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.  பிரதம விருந்தினர், பிரதம விருந்தினர் உரைகள், நடராஜா நர்த்தனாலயம் – நாட்டிய கலைமாணி ஸ்ரீமதி மதிவதனி பிரபாகரன், நாட்டியாலயா – நாட்டிய வித்தககி ராகினி  ராஜகோபால், சிலம்பம் நடனாலயம் – நாட்டிய கலைமாணி ஸ்ரீமதி வாணி சுதன்,  வல்வை  கலைக்கோயில் – கலைமாணி கலாவித்தகர் சுஜிதா ஆனந்த், லண்டன்  நர்த்தன கலாபவனம் – நாட்டிய கலைமாணி பரத கலாவித்தகர் ஸ்ரீமதி லோஜினி திசரூபன்  ஆகியோரின் நெறியாள்கையில் நடனம், பாடல்கள், கவிதைகள் என பல நிகழ்வுகள்  மண்படத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.

Croydon North Labour Party MP Steve Read, Civic Mayor of Croydon Alisa Flemming, Hon. Toni Letts OBE Former Croydon Mayor, Councillor Sherwan Chowdhury Labour Party Bensham Manor, Councillor Stuart Colins Labour Party Broad Green, Councillor Manju Shahul Hameed Labour Party Broad Green ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் ஆசிகளையும்  வழங்கியிருந்தனர்.

அன்றைய நிகழ்வின் முக்கிய நிகழ்வாக ஈழத் தமிழரின் அரசியல் தீர்வுக்கான மாதிரி வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். 

அதில் தமிழீழம்- 93%, சமஷ்டி – 7% எனவும் மக்கள் வாக்களித்திருந்தனர். விழா இனிதே நிறைவேறியது.

More from our blog

See all posts