ஆபிரிக்கத் தலைநகரங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர் (VS) சிறிலங்கா அரசாங்கம் !

  • March 12, 2014
  • TGTE

tgte_africa2ஐ.நா மனித உரிமைச்சபையின் அங்கத்துவ ஆபிரிக்க நாடுகளை இலக்கு வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயல்முனைப்புக் கொண்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளின் ஆதரவினைத் திரட்டும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கப்பிரதிநிதிகள் தொடர் பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில், சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையினை, ஆபிரிக்க அரச மட்டங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

ஆபிரிக்காவின் உள்நாட்டு இராஜதந்திர உயர்மட்ட தொடர்பாடல் குழுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை செயற்படுத்தி வரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆபிக்காவுக்கு சென்று ஜெனீவா திரும்பியுள்ளார்.

தற்போது ஜெனீவாவில் அப்பயணத்தின் தொடர்நிலைச் செயற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றார்.

இதேவேளை இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் சந்திப்புக்களை நேரடியாக மேற்கொண்டு வருகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையினை மையமாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு தமிழர் அமைப்புக்கள் பலவும் கூட்டாகவும் தனித்தும் சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணையினை வலுப்படுத்தும் களச்செயற்பாட்டினை ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts