ஐ.நா நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் சிறிலங்காவுக்கு எதிராக 19பக்க சாட்சிய அறிக்கை தாக்கல்:நா.க.த.அ.சட்ட முன்னகர்வு!

  • March 26, 2014
  • TGTE

ஐ.நா நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் சிறிலங்காவுக்கு எதிராக 19பக்க சாட்சிய அறிக்கை தாக்கல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்ட முன்னகர்வு !

g6அனைத்துலக சட்டங்களுக்கு அமைய சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையாக, 19 பக்க சாட்சிய அறிக்கை ஐ.நா மனித உரிமைக்குழுமத்திடம் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதாக நாடுகடந்த தமிழீழ அரசாயங்கம் அறிவித்துள்ளது.

சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகஇ ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும்இ பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffrey Robertson QC அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவுக் எதிரான இச்சட்ட நடவடிக்கைக்கு பணியில் அமர்தியுள்ளது

அரசியலமைப்பு குற்றவியல் மற்றும் ஊடகவியல் சட்டங்களில் உலகளாவியரீதியில் பிரசித்தி பெற்றவரும் இவற்றில் மைற்கற்களாக கொள்ளப்படும் பல வழக்குகளின் ஆலோசகரும் பிரிவி கவுன்சில் ((Privy Council) ஸ்ராஸ்பேர்க் (Strasbourg) நகரிலமைந்துள்ள ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் போன்றவற்றில் பல வழக்குகளில் பங்கெடுத்துவருமாக Geoffrey Robertson QC அவர்கள் விளங்குகின்றார்.

இப்பணியின் ஒர் அங்கமாக இன்று செவ்வாய்கிழமை போரின் சாட்சியமொன்றின் 19 பக்க அறிக்கையினை ஐ.நா மனித உரிமைக்குழுமத்திடம் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்த அவர்கள் தொடர்ந்து ஊடக மாநாடு ஒன்றினையும் நடத்தியிருந்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்க சட்டவாளாருமான Mr Ali Beydoun அவர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைசர் மாணிக்கவாசகர் அவர்களும் பங்கெடுத்திருந்தனர்

.

More from our blog

See all posts