தமிழகத்தில் எழுச்சி கொள்ளும் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : மதுரையிலும் தூத்துக்குடியிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது !

  • June 15, 2015
  • TGTE

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளது.

பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும் இணைய மூலமும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கமானது லட்சத்தினைக் கடந்து பத்து இலட்சத்தினை நோக்கி விறுப்புடன் நடைபெற்று வருகின்றது.

இதனொரு அங்கமாக,மதுரையிலும் தூத்துக்குடியிலும் எழுச்சியுடன் கையெழுத்து இயக்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தோழமை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

13.06.2015 அன்று மதுரை டிநொபிலி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் தெற்காசிய மனித உரிமை அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் அரங்க நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பில் தோழமை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 13.06.2015 அன்று மதுரை டிநொபிலி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் தெற்காசிய மனித உரிமை அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் அரங்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர், பேராசிரியர் முரளி( ), தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு தோழர் காமேசுவரி, மதுரை வழக்கறிஞர் சங்க தோழர் ஏ.கே.இராமசாமி, வழக்கறிஞர் நெடுஞ்செழியன், திரைப்பட இயக்குநர் வீரசிங்கம், தோழர் TSS மணி, முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் தோழர்சங்கரய்யா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

தூத்துக்குடியில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டை பேராசிரியர் பாத்திமாபாபு ஒழுங்கு செய்திருந்தார்.

நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் தோழர் பிரபு, வழக்கறிஞர் தோழர் அதிசயகுமார், ஊடகவியலாளர் TSS மணி மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களும், மீனவ மக்கள் அமைப்பின் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

                                      www.tgte-icc.org 

 

More from our blog

See all posts