சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வலியுறுத்தக் கோரும் கையேடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியீடு !

  • March 19, 2018
  • TGTE

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரும் கையேடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

2011ம் ஆண்டு இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்த நா.தமிழீழ அரசாங்கம், சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு நிகரான ஒரு சர்வதேச தீர்பாயத்திலோ நிறுத்தக்கோரி,  மில்லியன் கையெழுத்து இயக்கத்தினை 2015ம் ஆண்டு முன்னெடுத்திருந்தது. அதில் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்திருந்ததோடு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இருந்து ஒப்பமிட்டிருந்தார்கள்.

தற்போது இக்கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இக்கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ICC Booklet – TGTE 2018

 

More from our blog

See all posts