சிறிலங்கா தொடர்பிலான மதிப்பீட்டு அட்டை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – சிறிலங்கா எதிர்எதிர் வெளியீடு !!

  • March 21, 2018
  • TGTE

ஐ.நா மனித உரிiமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் வழங்கியிருந்த 25 உறுதிப்பாடுகள் தொடர்பிலான மதிப்பீட்டு அட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கமும் 39 பக்கங்களைக் கொண்ட, தனது மதிப்பீட்டு அட்டையினை இன்று ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பீட்டு அட்டை, சிறிலங்காவின் ஒவ்வொரு  உறுதிப்பாடுகளை 

 P – Pass.


P(d) – Pass of dubious value.

F – Fail.

F(c) – Failed due to Cunning.

F(a) – Failed Atrociously.

ஆகிய மதிப்பீடுகளைக் கொண்டு அளவிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம், ஏற்றுக் கொண்டிருந்த உறுதிப்பாடுகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதில்  படுதோல்வி அடைந்திருப்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிட்டு அட்டை தெளிவாக காட்டியுள்ளது.

இது குறித்து மதிப்பீட்டின் முத்தாய்புக் கூற்றில் தெரிவித்திருப்பதாவது, தேர்வில் தோல்வியுற்ற மாணவன் அடுத்த தரத்துக்கு உயரும் திறன் பெறுவதற்காக அதே வகுப்பில் மீண்டும் படிப்பது இயல்பு. ஆனால் சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால மதிப்பட்பீட்டில்,  சிறிலங்கா அரசாங்கத்தின் திறனின்மை வெளிப்பட்டிருப்பதோடு, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் பண்பாட்டு ஈட்டிமுனையாக சிறிலங்கா இருப்பதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவரே நீதிபதியாகவும் இருக்க முடியாது என்ற நீதிநெறியும், குற்றம் செய்தாலும் தண்டிப்பதில்லை என்ற உணர்வும்  சேர்ந்து கொள்கிறது.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தை சமாளிக்க சிறிலங்காவின் முக்கிய உத்தியாக இருந்து வருவது தந்திரமும் நம்பகமின்மையுமே என்பதும் தெளிவாகின்றது.

இந்நிலையில் அதே வகுப்பில் (மனித உரிமைப் பேரவையில்) இருப்பது நிலைமாறு கால நீதிக்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டை உயர்த்தப் போவதில்லை. ஆக, தோல்வியுற்ற, நிறைவு தராத மாணவனை சரிப்படுத்தும் மையத்துக்கு (அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு) அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனவகைச் சார்பின்மை, பொறுப்புக் கூறல், ஈடுசெய் நீதி, நேர்மை, பரிவு, தப்புச் செய்தமைக்கு உண்மையாக வருத்தப்படுதல் ஆகியவை குறித்து மேலும் கற்றுக் கொள்ள அதுவே உதவும் என மதிப்பீட்டு அட்டையின் முத்தாய்ப்புக் கூற்றில் கூறப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பீட்டு அட்டையும், சிறிலங்கா அரசாங்கத்தின் மதிப்பிட்டு அறிக்கையும் சமவேளையில் வெளிவந்திருப்பது மட்டுமல்ல, அனைத்துல நாடுகள் மட்டத்திலும், இராஜதந்திர மட்டத்தில் இரண்டு சேர்த்திருப்பது இங்கு குறிப்பிடதக்கது.


https://en.calameo.com/read/0003415029906023b06da

More from our blog

See all posts