தாயக உறவுகளுக்காக புலம்பெயர் உறவுகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

  • April 4, 2018
  • TGTE

இலங்கையில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் பல தமிழர்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல தமிழர் தரப்புக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஐநா கூட்டத்தொடரின் அமர்வுகளில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசப்பட்டு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் தமக்கான நீதி எட்டப்படுமென பெரிதும் எதிர்பார்த்து ஏமார்ந்த மக்கள் நல்லாட்சி அரசினை ஆட்சியில் அமர்த்தி அவர்கள் மூலம் தீர்வை எதிர்பார்த்தனர். எனினும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழரின் கோரிக்கைகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது.

தமிழர்களை சிறுபான்மை மக்களாக அடக்கி ஒடுக்கி அரசினை முன்னெடுத்து செல்கின்றது. அதிலும் மாறி மாறி பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அதனை பிரயோகிக்காமல் இருப்பது தமிழர்களை புறம்தள்ளும் செயலாகவே காணப்படுகின்றது.

அந்த வகையிலே காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் கணவரையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ இழந்த குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியிலே வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

அண்மையில் 70 வயதுடைய தமிழ் அரசியல் கைதி ஒருவர் வெலிக்கடை சிறையில் உயிரிழந்திருந்தார். சிறை வாழ்க்கையில் போதியளவு பராமரிப்பு இல்லாமையாலே உயிரிழந்துள்ளார். இவ்வாறான வயது முதிந்தவர்களை சிறைகளில் தடுத்து வைத்து இலங்கை அரசு எதனை சாதிக்க நினைக்கின்றது.

இதனை கருத்திற்கொண்டு சர்வதேச நாடுகளிடமும் பிரித்தானிய அரசிடமும் கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் எமக்கான நீதியின் வேட்கையை வென்றிடலாம். அந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தாயக உறவுகளின் கரங்களை பலப்படுத்த அதாவது தாயகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யட்ட அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆனது பிரித்தானிய பிரதமர் வாயிற்தளம் முன்பாக மதியம் 1மணிக்கு ஆரம்பமான இப்போட்டத்தில் இன்றைய கவனயீர்ப்பு போராட்டம் எதற்கான காரணத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது என கேட்கப்பட்ட கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் மதிப்பிற்குரிய ஆறுமுகம் கந்தப்பு அவர்கள் தெரிவிக்கையில் இன்று நாங்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். தாயகத்தில் ஒரு வருடத்துக்கு மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற போதிலும் அங்குள்ள தமிழ்த் தலைவர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். எனவே அரசியல் கைதிகளாக இருக்கும் எமது உறவுகளை எந்த வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கக் கோரும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கின்றது என தெரிவித்தார்

இன்று நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டம் எந்த அளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலன் பிரதி அமைச்சர் மதிப்பிற்குரிய சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் தெரிவிக்கையில் :

“Easter Sunday எனப்படும் உயிர்த்த ஞாயிறு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். எனவே இன்று நாம் செய்யும் பேரணியின் நோக்கம் அதிகளவு மக்களை சென்றடைய வாய்ப்புள்ளது. எமது உரிமைக்காகப் போராடிய எம்மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது இன்னல்களைக் களைய முயற்சி செய்ய வேண்டியது எமது கடமை” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டம் ஆனது எந்த வகையில் இலங்கை அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து சாதகமான நிலையினை பெறலாம் என கேட்கப்பட்ட கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடூரங்கள் இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளின் அமைச்சர் மதிப்பிற்குரிய பத்மநாதன் மணிவண்ணன் அவர்கள் தெரிவிக்கையில் : உலகதாடுகளுக்கு இலங்கையில் என்ன நடைபெறுகின்றன என்று இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டம் மூலமே உணர்த்தலாம். தற்போதுள்ள நிலையில் ஆனந்த சுதாகரனின் பிரச்சனை பலரால் பேசப்படுகின்றது. இவரைப்போல ஏராளனானவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு பயங்கரவாத தடைசட்டத்தினை 2மாதங்களில் நீக்குவதாக கூறிய இலங்கை அரசு இதுவரை நீக்கபடவில்லை என்றும் இவ்வாறு அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி அதன் மூலம் பொய்யான வாக்குமூலத்தினை பெற்று நீண்டகாலமாக அவர்களை தடுத்து வைக்கின்றது. பிரித்தானி அரசிற்கு இவ்வாறான அழுத்தம் கொடுப்பதன் மூலம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

பிரித்தானிய அரசிற்கு எவ்வாறான அழுத்தங்களை கொடுக்கலாம் என நினைக்கின்றீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் மதிப்பிற்குரிய தாமோதரம்பிள்ளை முருகதாஸ் அவர்கள் தெரிவிக்கையில் : பிரித்தானியாவிற்கான அழுத்தம் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அழுத்தம் என்றும் பாராளுமன்றத்தினுள் அனைத்து கட்சி அமைப்பு என்று தமிழர் தரப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் நோக்கம் என்னவெனில் தமிழர் பிரச்சனையை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது. தமிழர்களின் வாக்குகள் என்பது இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெறுமதிமிக்க விடையம் தமிழர்களின் வாக்குத்தான் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றியை தீர்மானிக்கின்ற வாக்குகளாக அமைகின்றது. ஆகையால் இவ்வாறான அழுத்தம் கொடுக்கும் போது அவர்கள் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள். 

மேலும் புலம்பெயர் தேசத்தவர்கள் எவ்வாறான செயற்பாட்டின் மூலம் தீர்வினை நோக்கி பயணிக்கலாம் என்ன கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தருகையில் 2009ம் ஆண்டிற்கு பின்னர் அகிம்சை வழியில் தான் போராட வேண்டி உள்ளது. ஆகவே. ஜனநாயக வழியாக தான் தமிழர்கள் போராட வேண்டும் தாயகத்திலே ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறுகின்றது போராட்டம் அதற்கான தீர்வு இதுவரை இல்லை. தாயகத்தில் உள்ளவர்கள் ஓரளவிற்கு மட்டுமே குரல் கொடுக்க முடியும் அதாவது ஒரு எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலைமை இதனால் தான் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற நாங்கள் அவர்களின் குரலுக்காக கரங்கோத்து உயர்த்தி குரல்கொடுக்கின்றோம். ஆதரவற்ற எங்கள் உறவுகளுக்கு ஒரு பலமான நம்பிக்கையை கொடுக்கும். இப்போராட்டம் தனிநபர்களினதோ அல்லது அமைப்புகளினதோ அல்ல தமிழ்மக்களுகலகான போராட்டம். ஆகவே புலத்தில் வாழுகின்றவர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் தற்போதைய நிலை என்ன அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திரு.மதனகுமாரன் அழகையா அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்களில் பலர் விஷ ஊசி ஏற்றப்பட்டு உடல்நலம் குன்றி அடுத்தவர்களிடம் கையேந்தி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யாரிடமிருந்து உதவி பெறுவது என்று தெரியாமல் அவர்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வழி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பயிர் செய்தல் போன்ற சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாகும்” எனக் கூறினார்.

மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் சாதகமான சூழ்நிலை தற்போது உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் மகிந்த ஆட்சியிலிருந்தபோதும் சரி, மைத்திரி ஆட்சிக்கு வந்தபோதும் சரி எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எந்தவிதப் பொறுப்பும் கோரவில்லை. நாங்கள் வடக்கும் கிழக்கும் இணைந்த சுமுகமான தீர்வையே எதிர்பார்க்கிறோம். நாங்கள் கேட்டுக்கொள்வது நீதி, அமைதி மற்றும் நிரந்தரத் தீர்வு என்பவையாகும். இதை அடைவதற்கு எம்முடன் இணைந்து எமது செயற்பாடுகளில் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் இணைந்து கொள்வது எமது நியாயமான கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் எனத் தெரிவித்தார்.  

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இதற்கு வலுச்சேர்த்தனர். 

இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடூரங்கள் இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளின் அமைச்சர் மதிப்பிற்குரிய பத்மநாதன் மணிவண்ணன் அவர்கள் இதனை ஒழுங்கமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு 

பிரித்தானிய

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

More from our blog

See all posts