பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு ! 

  • June 10, 2019
  • TGTE

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவு தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அரசையே மையமாக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறிலங்கா ஆடசியாளர்களுடன் உறவாடித் தமது நலன்களை  அடைந்து கொள்ள 
முடியும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிங்கள அரசுக்கு சார்பாக அமைந்து விடுவதற்கு இது வாய்பளிக்கின்றது.

தங்களது தலைமையில் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் மூலம் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் செயற்படுவதற்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் என தங்களிடம் தோழமையிடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts