பிரித்தானியாவில் மாவீரர் நினைவாக இரத்ததான நிகழ்வு – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

  • November 25, 2019
  • TGTE

 

தாயகவிடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தியும் நினைவுகூர்ந்தும் மாவீரர் மற்றும் எம்மக்கள் சார்பில் இங்கிலாந்தில் உள்ள மக்கள் பலர் இரத்தானம் வழங்கியிருந்தார்கள்.

 Liverpool பகுதியில் 22/11/2019 அன்று  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 11 மணி முதல் 3 மணி வரை இரத்ததான முகாம் நடைபெற்றது, பின்பு அதனை தொடர்ந்து  மாலை 4.30 மணிக்கு மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வும்  உணர்சிபூர்வமாக நடைபெற்றது.


பல பொதுமக்கள் கலந்துகொண்டு எங்களுக்காக போராடிமடிந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியோடு அவர்களின் கொள்கையில் தொடர்ந்து பயணிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.


இதனையடுத்து நேற்றைய தினம் 24/11/2019 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரில் Tooting மற்றும்Edgware பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமளவிலான செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். மாவீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்வது மட்டுமல்லாது அதனை உலகறியச் செய்வதாகவும் இந்நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது. 


எம் மாவீரர்கள் நினைவு சுமந்த இரத்ததான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

More from our blog

See all posts