பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் தீர்வுக்கான வாதுரைகளை முன்வைத்தது நாடுகடந்த தமிழிழ அரசாங்கம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியினைத் தொடர்ந்து, தீர்வு தொடர்பான தனது அடுத்த கட்ட வாதுரைகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என இவ்ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21ம் தேதி) முன்னராக வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பு தொடர்பில் அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் சட்டத்துக்கு முரணான தடை நடவடிக்கை குறித்து, சட்டமுறைப்படி தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்துள்ளது.

‘விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட பட்டியலில் இட்டது பாராளுமன்றம் என்றபடியால், அதனை அப்பட்டியலில் இருந்து நீக்குவதா அல்லது தொடர்வதா என்ற முடிவினை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். மேலும் சிறிலங்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு தேடி வந்த தமிழ்உறவுகள், பிரித்தானியாவிலும்  தொடர்ந்து தமிழீழ கோரிக்கைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு, அவர்கள் மீதிருக்கும் பயங்கரவாத முத்திரை நீங்குவதற்கு இத்தடை நீக்கம் வழிசமைக்கும் எனவும் இத்தடை நீக்கம் மனித உரிமைகளின் அடிப்படையிலான தமிழர்களுடைய பேச்சு சுதந்திரத்தினையும், கருத்து சுதந்திரத்தினை முழுமையாக எந்தவித அச்சமும்மின்றி அனுபவிக்க வழிகோலும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துள்ள நிலையில் வழக்கு விசாரணையின் போது வாதிட்டது போலவே, இப்போதும் தடை தொடர்பான முடிவினை எடுக்க தமக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வாதுரைத்துரையில் ஆணையத்திடம் கோரியுள்ளது.

உள்துறை அமைச்சரின் வாதத்தினை ஏற்றுக் கொண்டால், உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் தடைப்பட்டியலில் இடும்பட்சத்தில் இந்த தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை மீண்டும் ஆரம்பில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதத்தில் தெரிவித்துள்ளது.

தீர்வு தொடர்பாக இன்னுமொரு விசாரணை வேண்டுமா, அல்லது எழுத்து மூலமான வாதுரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கலாமா என்பது தொடர்பில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் பரிசீலித்து வருகிறது.

பிரித்தானிய உள்துறை அமைச்சின் தடையினை நீக்குகின்ற அதிகாரம் இந்த ஆணையத்துக்கு இல்லாதுவிட்டாலும், இத்தீர்ப்பின் அடிப்படையில் அரசியல்ரீதியான கொள்கை முடிவினை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பிரித்தானிய பாராளுமன்றத்துக்குள் இவ்வியத்தினை கொண்டு செல்லும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

பி.கு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் சட்டநடவடிக்iகியினை முன்னெடுத்து வரும் Bindmans ஊடக அறிக்கை இதணைக்கப்பட்டுள்ளது.

https://www.einpresswire.com/article/531415689/tgte-awaits-decision-on-remedy-regarding-unlawful-decision-on-status-of-ltte

அன்புள்ள பிரித்தானிய தமிழர்களுக்கு !

2020 அக்டோபர் 21 அன்று விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதமானது என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தடை பிரித்தானிய தமிழர்களின் குடியுரிமை வாழ்க்கையை பாதிக்கிறது.

உங்களின் உதவி எங்களுக்கு தேவை.
தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து படிவத்தை நிரப்பவும்.
விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு உள்துறை செயலாளரைக் கோர இது உங்கள் எம்.பி.க்கு மின்னஞ்சல் அனுப்பும்.

https://www.tgte-homeland.org/mail2mp/index.php

தயவு செய்து உங்கள் வீட்டில் இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் மின்னஞ்சலை அனுப்பவும்.
அத்துடன் உங்கள் நண்பர்கள்,உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் மின்னஞ்சலை அனுப்பச் செய்யவும்.

தொடர்புகளுக்கு:-
02071936655
adminuk@tgte.org

More from our blog

See all posts