நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !

கொசோவோ, ஆர்மேனியா நாட்டு உயர்மட்டத் தலைவர்களின் சிறப்புரையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.

வருடத்தில் இரு தடவைகள் நேரடி அரசவை அமர்வுகளைக் கொண்ட அரசவை அமர்வானது, கொரோனா வைரஸ் பெருற்தொற்று காரணமாக கூட முடியாத நிலையில், இணையவழி சிறப்பு அரசவை அமர்வாக இரண்டு நாட்களுக்கு இடம்பெறுகின்றது.

இன்று (சனிக்கிழமை) தொடக்க நிகழ்வில் கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorian ஆகியோர் பங்கெடுத்து சிறப்புரையாற்றியிருந்தனர். அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் பொதுஅமைப்பு பிரதிநிதிகளும் தமது கருத்துரைகளையும், வாழ்த்துரைகளை வழங்கினர்.

துணை அவைத்தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை தொகுத்து வழங்க, துணைப் பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தனர்.

தொடக்க நிகழ்வினைத் தொடர்ந்து ‘இந்தியப் பெருங்கடல் புவிசார் இராஜதந்தி அரசியலில் தமிழர்களை ஒரு தரப்பாக மாற்றுதல்’ எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.–

More from our blog

See all posts