இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடன நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Watch Live Event: Dec. 9th. 2020 @ 4pm (EST), 9pm(UK), 10pm(EU), 2.30am(TE & INDIA), 5.00am(PERTH), 8.00am(SYDNEY)

TGTE.TV:  https://www.tgte.tv

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில்  

Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.

டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை

Watch Live Event: Dec. 9th. 2020 @ 4pm (EST), 9pm(UK), 10pm(EU), 2.30am(TE & INDIA), 5.00am(PERTH), 8.00am(SYDNEY)

TGTE.TV: https://www.tgte.tv

Face Book: https://www.facebook.com/104158694645320/posts/215349820192873/

YouTube: https://www.youtube.com/watch?v=sZdarCn6INo

ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் காணமுடியும்.

சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப் பெற்றுத்தரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்னராக இந்நாள் தொடர்பில் குறிப்பிட்டிருந்ததோடு, தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு, தமிழர்களுக்கான பிரகாரநீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட வேண்டும் எனவும் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

More from our blog

See all posts